http://www.kamakoti.org/tamil/Kural110N1.htm
புத்தி ஆராய்ச்சியே செய்யாமல் பகவானையும் சாஸ்திரங்களையும் பூர்ணமாக நம்பிக் கொண்டு இருந்துவிட்டால் அது ரொம்பவும் சிலாக்யம்தான். ஆனால் இப்படிப் பூர்ணமாக நம்பிக் கொண்டு அதிலேயே ஈடுபட்டு ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ள நம்மால் முடிகிறதா? அப்படி முடியாத நிலையில் தெய்வ பரமான சிந்தனையோ, ஆத்மாவைப் பற்றிய நினைப்போ இல்லாமல், அதே சமயத்தில் எந்த விதமான அறிவு விசாரணையும் செய்யாமல் வெறுமே தின்று கொண்டும், தூங்கிக் கொண்டும் சோம்பேறியாக இருப்பதைவிட, புத்தியைக் கொண்டு ஆராய்ந்து, "ஈச்வரன் இல்லை; நாஸ்திகம்தான் சரியானது" என்ற முடிவுக்கு வந்தால்கூடத் தேவலை என்பேன். ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள ஒரு முயற்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து ஏதோ பரிசிரமப் பட்டு ஒருத்தன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன் என்பேன். அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித் தெளிவு ( clarity ) பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டுவிடவும் வழி பிறக்கும். ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை!
இதனால்தான் 'சார்வாகம்' என்கிற நாஸ்திக ஸித்தாந்தத்தையும் ஒரு மதமாக ஆதியில் வைத்தார்கள். சாரு+வாகம் என்பதே சார்வாகம். அதாவது கேட்பதற்கு நன்றாக இருக்கிற வாக்கு என்று அர்த்தம். "சாமி, பூதம் என்றெல்லாம் அலட்டிக் கொண்டு விரதம், தபஸ், இந்திரிய நிக்ரஹம், மனோ நிக்ரஹம் என்று அவஸ்தைப்பட வேண்டாம். மனம் போனபடி, இந்திரியம் போகிற வழியில் ஆனந்தமாயிருப்போம்! என்று கேட்பதற்கு ரம்யமாகச் சொல்வதால் சார்வாகம் என்று அதற்குப் பேர்.
ஆனால் அப்படி நடக்கும்போது ஆனந்தத்தோடு துக்கமும் தானே வருகிறது? அது தானே அதிகம் வருகிறது? இந்த துக்க நிவிருத்திக்குத்தான் மெடீரியலிஸமாக இல்லாத மற்ற மதங்கள் வழி சொல்கின்றன.
----
http://www.kamakoti.org/tamil/Kural113.htm
"ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை ஸ்ருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்மக் குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது - பால் தயிராகப் பரிணமித்த மாதிரி என்றாலும் தப்பு. அப்படிச் சொன்னால் பால் தயிரானபின் தயிர் தான் இருக்குமே தவிர பால் இருக்காது. இம்மாதிரி பரமாத்மா ஜகத்து பரிணமித்தபின் இல்லாமல் போய் விட்டார் என்றால் அது மஹா தப்பல்லவா? அதனால் பரிணாமமும் இல்லை. தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே இன்னொரு பக்கம் மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார். இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான், வேஷம்தான்! ஒருத்தன் ஒரு வேஷம் போட்டுக் கொள்கிறான் என்றால் அப்பொழுது அவன் அவனாக இல்லாமல் போய் விடுகிறானா என்ன? அப்படித்தான் இத்தனையும் வேஷம், கண்கட்டு வித்தை! இத்தனையாலும் பாதிக்கப்படாமல் ஸத்வஸ்து ஏகமாக அப்படியே இருந்துகொண்டேயிருக்கிறது" என்று ஒரே அடியாக அடித்துவிட்டார். இதற்கு "விவர்த்த வாதம்" என்று பெயர்.
ஒரு கயிறானது பாம்பு மாதிரித் தோன்றுவது விவர்த்தம். கயிறு என்ற உபாதான காரணத்தை வேறு ஒரு நிமித்த காரணம் பாம்பாக மாற்றவில்லை. எனவே இது ஆரம்ப வாதம் இல்லை. கயிறு பாம்பாகப் பரிணமிக்கவுமில்லை; அதாவது transform ஆகிவிடவில்லை. கயிறு கயிறாகவே தான் இருக்கிறது. ஆனால் நம் அஞ்ஞானத்தால் பாம்பு மாதிரித் தோன்றுகிறது. இப்படியே அஞ்ஞானம் அல்லது அவித்யை என்பதால் பிரம்மம் லோகமாகவும் தனித்தனி ஜீவர்களாகவும் நமக்குத் தெரிகிறது.
---
ஒரு வஸ்துவைப் பார்த்தால் அதைப்பற்றிய ஞானம் உண்டாகிறது. சில ஞானங்கள் சரியாய் இருக்கின்றன. சில தப்பாய் இருக்கின்றன. ஸ்படிகத்தைக் கற்கண்டு என்று நினைக்கிறோம். அது தப்பான ஞானம். கற்கண்டைக் கற்கண்டாக நினைப்பது சரியான ஞானம். சரியான ஞானத்தைப் ப்ரமா (prama) என்பார்கள். தப்பான ஞானத்தை ப்ரமா (bhrama) என்று சொல்லுவார்கள். ஸம்சயஞானம் என்றும் நிச்சய ஞானம் என்றும் இரண்டு விதம். இது சரியான அறிவா என்ற ஐயத்துடன் கூடியது ஸம்சயஞானம். ஐயமில்லாமல் உறுதியுடன் அறிவது நிச்சயஞானம். சில சமயங்களில் ஒன்று தப்பாக தோன்றினாலும் அப்போதைக்கு நிஜமாகத்தான் தோன்றுகிறது. அப்பொழுது இந்த ஞானம் பிரமாணம்தான் என்று தோன்றும்- ஸ்படிகக் கற்கண்டு மாதிரி. சில ஞானங்கள் தோன்றும் பொழுதே பொய்யாகத் தோன்றுகின்றன. குளத்திற்குள் தலைகீழாகத் தெரிகிற மரத்தின் பிரதி பிம்பத்தை அறியும் பொழுதே அது நிஜமல்ல, அப்ரமாணம் என்றும் தோன்றுகிறது. ஞானம் வரும் பொழுதே பிரமாணம் என்று தோன்றுவதும் அப்ரமாணம் என்று தோன்றுவதும் ஆக இரண்டு வகை. வரும் காலத்திலே இது நிஜந்தான் என்று வருகிற ஞானம் பிராமாண்ய க்ரஹ ஞானம்; தோன்றும் பொழுதே அப்ரமாணம் என்று தோன்றுவது அப்ரமாண்ய க்ரஹ ஆஸ்கந்தித ஞானம். ப்ரமை (pramai) யில் போலவே, ப்ரமை (bhramai) யிலும் பிரமாண ஞானம் உண்டு. அதனால்தான் ஸ்படிகத்தைக் கற்கண்டாக நினைக்கும்பொழுதும் நம்முடைய நினைப்பு பிரமாணமாகத் தோன்றுகிறது.
இப்படியாக ஒரு வஸ்து தோன்றும் போதே அது நிஜமானது (ப்ரமாணம்) அல்லது பொய்யானது (அப்ரமாணம்) என்றும் தோன்றுகிறதே, இந்த ப்ரமாண அப்ரமாண அறிவானது வஸ்துவைப் பார்க்கிற நம்முடைய ஞானத்திலிருந்து ( subjective -ஆக) தோன்றுகிறதா, அல்லது ( objective -ஆக) அந்த வெளி வஸ்துவிலிருந்து தோன்றுகிறதா? நம்மிலிருந்து தோன்றினால் 'ஸ்வத: ப்ரமாணம்'. நாம் அறிகிற வஸ்துவிலிருந்து தோன்றினால் 'பரத: ப்ரமாணம்'.
இந்த இரண்டில் எது சரி என்றுதான் மண்டனர் வீட்டுப் பெண் கிளிகள் வாதம் செய்தனவாம்.
நமக்கு உண்டாகும் ஞானம் பிரமாணமானது அல்லது அப்பிரமாணமானது என்று ஏற்படுகிற உறுதி நம் ஞானத்துள்ளேயே ஸப்ஜெக்டிவ்வாக இருப்பதில்லை. அது நாம் அறிகிற வஸ்துவிடமுள்ள குணத்தால் ஏற்படுவதுதான். அந்த வஸ்துவிடமிருந்து நடைமுறையில் பிரயோஜனம் அடைய முடிந்தால்தான் நம்முடைய ஞானம் சரியானது அல்லது தப்பானது என்று ஆகிறது. அதாவது நம் ஞானம் சரியா தப்பா என்பது ஆப்ஜெக்டிவ்தான் என்பதே நியாய சாஸ்திரத்தின் கருத்து. மண்டனமிச்ரர் போன்ற மீமாம்ஸர்களின் அபிப்ராயமோ இதற்கு மாறானது. நம் ஞானம் பிரமாணமானது என்கிற உறுதி நம்முடைய அறிவையே சேர்ந்த விஷயந்தான்; ஆனால் நம் ஞானம் பிரமாணமில்லை (அப்ரமாணம்) என்று தெரிவது வெளிவஸ்துவைப் பொறுத்த விஷயம்- "ப்ராமாண்யம் ஸ்வத: அப்ரமாண்யம் பரத:"- என்பது அவர்கள் கட்சி.
இந்த வாதங்களெல்லாம் தர்க்கத்தில் வரும்.
"வாதம்" என்றாலே இந்தக் காலத்தில், தான் சொன்னதே சரியென்று பிடிவாதம் பண்ணுவது என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் வாதமென்பது நாமும் பேசி எதிராளியையும் பேசவிட்டு இரண்டையும் ஆலோசித்துச் சீர்தூக்கி உண்மையை அறிவதுதான். அநேக இடங்களுக்குப் போய் மண்டனமிச்ரர் போன்றவர்களிடம் ஆசாரியாள் வாதம் செய்தார் என்பது இப்படித்தான்.
http://www.kamakoti.org/tamil/Kural114.htm
---
No comments:
Post a Comment