Monday, 20 June 2016

வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், ..


Jan 12, 2016 at 8:23am 
Quote 
Post Options

Post by varagooran on Jan 12, 2016 at 8:23am

"வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு "



(இன்று காலை 07-15 மணிக்கு பொதிகை டி.வி.யில் இந்திரா சௌந்தர்ராஜன் சொன்ன அற்புத நிகழ்ச்சி-முன்பு பால ஹனுமானில் வந்தது)



அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம கல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி

அநந்த பூமா மமரோக ராசிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
1507603_10202994818654217_40352395530888678....jpg




பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.





ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.







ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.





நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.





அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.





நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.







மஹா பெரியவா அருள்வாக்கு : -



“நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தைக் கொடுப்பதற்கு ஸ்வாமியினாலே கொடுக்கப்பட்டவை; இவை எல்லாம் தபஸே” என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.


Read more: http://periva.proboards.com/thread/10939/#ixzz4C6rhs5oO

No comments:

Post a Comment